Friday, February 13, 2009

வேலூர் காங்., எம்.எல்.ஏ.,வுக்கு மிரட்டல் கடிதம்

வேலூர் : வேலூர் மாவட்ட காங்கிரஸ் லைவரும், எம்.எல்.ஏ.,வுமான ஞானசேகரனுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. ஞானசேகரன் விடுதலைப்புலிகளுக்கு எதிராக சட்டசபையில் பேசக்கூடாது என்றும், மீறி பேசினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி 4ம் தேதி அன்று எம்.எல்.ஏ., ஞானசேகரனது அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அவருக்கு தற்போது வந்துள்ள மிரட்டல் கடிதத்தில் பிப்., 4 சம்பவம் ஒரு எச்சரிக்கை என்றும், தொடர்ந்து புலிகளை எதிர்த்து பேசினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டள்ளது. அந்த கடிதத்தில் முகவரி, கையெழுத்து ஏதும் இல்லை. போலீசாருக்கு இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Source : Dinamalar